பல நாட்களாக மிரட்டி வந்த சிறுத்தை சிக்கியது

துமகூரு, ஜூலை 25-
பல நாட்களாக மிரட்டலாக இருந்து வந்த சிறுத்தை ஒன்றை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தும்கூர் மாவட்டம் கொரட்டகரே தாலுக்கா, லக்கிராம்புரா கிராமத்தில் பல நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. கிடைத்த ஆடு, மாடு, கோழி , நாய்கள் எனபலவற்றையும் கடித்து குதறி கொன்று, தின்று வந்தது.இது குறித்து அப்பகுதியினர் சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்திருந்தனர். புகாரின் பேரில் வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை நடமாடும் பகுதிகளில் கூண்டு வைத்தனர் .கூண்டுக்குள் நாய் ஒன்றை கட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் இறைத்தேடி சென்ற சிறுத்தை கூண்டுக்குள் புகுந்ததும் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் கூன்டுடன் சிறுத்தையை பிடித்து, வனப் பகுதிக்கு கொண்டு சென்றனர். னால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.