பல மாநிலங்களில் கொரோனா சமூக பரவல்: ஹர்ஷ் வர்தன்

டெல்லி அக்.18-
கொரோனா வைரஸ் நாட்டின் பல மாநிலங்களில் பல சமூக பரவலாக மாறியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். தெரிவித்தார். சமூக பரவல் இன்னும் நாடு முழுவதும் ஏற்படவில்லை, எனவே மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றார்.வாராந்திர உரையாடலில் கலந்து கொண்ட அவர், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என்றார். இந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் சில மாவட்டங்களில் சமூக பரவல் வேகமாக இருப்பதாகவும் இது, நாடு முழுவதும் பரவாமல் தடுப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கேரளாவின் கடலோர மாவட்டங்களின் பூன் துரா மற்றும் பில்லிவிலா பகுதிகளில், தொற்று சமூக பரவலாக ஏற்பட்டு, இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தொற்று சதவீததம் குறைத்துள்ளது.
மேற்கு வங்கத்திலும் சமூக பரவல் ஏற்பட்டு இருப்பதாகவும் துர்காவை அடுத்து இந்த தொற்று சமூகத்தில் பரவியுள்ளதாகவும், முடிந்தவரை தங்களை காத்துக் கொள்ள சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டுமென்றும் மக்களை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.