பள்ளத்தில் விழுந்த பள்ளி பஸ்

பெங்களூர்: ஜூன். 2 – மாணவர்களை அழைத்து வர சென்றுகொண்டிருந்த பள்ளிக்கூட பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து இதனால் பஸ்ஸின் ஓட்டுநர் படு காய மடைந்துள்ள சம்பவம் இன்று காலை பொம்மனஹள்ளி அருகில் கூட்லு அருகில் நடந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுனரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவனுடைய நிலைமை மோசமாயுள்ளதாக தெரிகிறது. ஹெச் எஸ் ஆர் லே அவுட்டின் பிரீடம் சர்வதேச பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான பஸ் இன்று காலை மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வர சென்றிருந்தது. அப்போது கூட்லு அருகில் இருந்த பள்ளத்தில் பஸ் உருண்டு விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் எந்த மாணவரும் இருக்க வில்லை. இந்த விபத்து குறித்து பரப்பன அக்ரஹார போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. பஸ் விழுந்த பள்ளம் 100 அடிக்கும் ஆழமானது. மாநகராட்சி பகுதிக்குள் உள்ள இந்த பள்ளத்தை மூட அருகில் உள்ளவர்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருப்புப்பினும் பயனில்லாமல் இன்று இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர் . மாறு