பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்கால், மார்ச் 2-
காரைக்காலில் இன்று 1முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.