பள்ளிகள் திறக்க குமாரசாமி எதிர்ப்பு

பெங்களூர், நவ. 22- கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை திறக்க முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கொரோனா அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை இந்த சமயத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே மாநிலத்தில் பள்ளிகளை திறக்க கூடாது என்று அவர் வலியுறுத்தினார் கர்நாடக மாநிலத்தில் டிகிரி கல்லூரிகள் கடந்த 17ஆம் தேதி திறக்கப்பட்ட கல்லூரிகள் பிறந்த சில நாட்களிலேயே ஏராளமான மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதல்வர் எடியூரப்பா முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் நாளை இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது இந்த நிலையில் பள்ளிகளை திறக்க முன்னாள் முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.