பள்ளிக்குச் சென்ற சிறுவன் பஸ் மோதி சாவு

பெங்களூரு, செப்டம்பர் 15-
பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் பிரதான சாலையில் பள்ளி பேருந்து மோதியதில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 2ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.. பிரகாஷ் மற்றும் ப்ரீத்து தம்பதியின் மகன் நிதீஷ்குமார் (7) இறந்த சிறுவன் என டிசிபி கலா கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
பள்ளிக்கூடத்தில் பயின்று வந்த நிதிஷ்குமார், வீதியின் விளிம்பின் இடதுபுறம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், காந்திநகரில் இருந்து வந்த பஸ் சிறுவன் மீது மோதி உள்ளது. இதைத்தொடர்ந்து
பள்ளி பேருந்தின் ஓட்டுநர் தனது நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்விபத்தில் பலத்த காயமடைந்த நிதிஷ்குமார் லயன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 10-40 மணிக்கு இறந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த எச்ஏஎல் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ராயன் பள்ளி பஸ் டிரைவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.