பள்ளிக்கு சென்ற மூன்று மாணவியர் காணவில்லை

பெங்களூர்: செப்டம்பர். 14 – நகரில் பள்ளிக்கு சென்ற மூன்று மாணவியர் காணாமல் போயிருப்பதுடன் இது குறித்து பெற்றோர் புலிகேசி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சக்தீஸ்வரி (15) , வருணிகா (16) மற்றும் நந்தினி (15 ) ஆகியோர் காணாமல் போன மாணவியர். கடந்த செப்டம்பர் 6 அன்று பிராமனேட் வீதியில் உள்ள தூய ஜோசப் கான்வென்ட் உயர்நிலை பள்ளியிலிருந்து இந்த மாணவியர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும் இன்னும் இவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. பெற்றோர் எங்கெங்கோ தேடியும் மாணவியர் கிடைக்கவில்லை. தவிர பள்ளியில் கேட்டால் அங்கு ஊழியர்களும் சரியாக எதையும் சொல்ல வில்லை. என பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மற்றொரு பக்கம் வீட்டில் பிரச்சனைகள் உள்ளது . படிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் வீட்டை விட்டு செல்கிறோம் என சிறுமியர் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளனர் . காணாமல் போன வழக்கு பதிவு செய்துகொண்டுள்ள புலிகேசி நகர் போலீசார் தற்போது மாணவியரை தீவிரமாய் தேடி வருகின்றனர்.