பள்ளியில் தூக்கில் தொங்கிய மாணவன்

லக்னோ,மே 10-
உத்தரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது பள்ளிக்குப் பின்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
ஒரு மாணவர் பள்ளி கட்டிடத்தின் பின்புறம் ஒரு ஜன்னலில் தாவணியில் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்ததை, நேற்று காலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.ராணிப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியின் முதல்வர் கூறுகையில், திலீப் யாதவ் (13) என்ற மாணவர் கடந்த சில நாட்களாகவே வகுப்புகளுக்கு வரவில்லை. பள்ளி வளாகத்திற்கு அவர் எப்போது வந்தார் என்பது தெரியவில்லை. இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.
போலீசார் உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.பள்ளி வளாகத்தில் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.