பள்ளி சிறுவர்களுக்கு முட்டை திட்டம் வெற்றி

பெங்களூர், செப். 20-
பள்ளி சிறார்கள் முட்டை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்துக்கு இடையே முட்டை வழங்கும் திட்டம் வெற்றிய டைந்து ள்ளது. 85 சதவீதம் சிறார்கள் முட்டை சாப்பிடுகின்றனர்.பள்ளி சிறவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில் மதிய உணவுடன் முட்டை வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் உணவு பழக்கத்தை மாற்றுவதாக குற்றம் சாட்டினர். இதற்காக சிலர் தங்களின் பிள்ளைகளை வேறுபள்ளிக்கு மாற்றினர்.முட்டை சாப்பிடுவோரா
முட்டை சாப்பிடலாம். பிடிக்காதவர்கள் வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்கப்படும் என கூறியது. ஜூலையில் இத்திட்டத்தை செயல்படுத்தியது. விவாதங்களுக்கு இடையே செயல்படுத்தப்பட்ட திட்டம் நிறைவடைந்துள்ளது.
கர்நாடகாவில் 48 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் 46 லட்சம் சிறார்கள் கல்வி பெறுகிறார்கள். 85 சதவீதம் சிறார்கள் மதிய உணவுடன் முட்டையும், 15 சதவீதம் பேர் வாழைப்பழக்கம் கடலை மிட்டாய் சாப்பிடுகின்றனர்.