பள்ளி பஸ் கவிழ்ந்து 4 மாணவர்கள் படுகாயம்

ஹாவேரி, டிச.26-
இன்று காலை ஹாவேரி மாவட்டம், சவனூர் தாலுகா, அல்லிபுரா கிராஸ் என்ற இடத்தில் பள்ளி பஸ் ஒன்று பல்டிய டித்தது. இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். 12 பேருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது: ராய்ச்சூர் மாவட்டம், லிங்க சுகூர் தாலுக்கா, சஜ்ஜன குட்டா, அரசு பள்ளி மாணவர்கள், ஹாவேரி மாவட்டம், சவனூர் தாலுகாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது இவர்கள் சென்ற பஸ் அல்லிபுரா கிராஸில் பஸ் , ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பல்டி போட்டது.
இதில் டிரைவர், மற்றும் 3 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. 12 பேருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. இவர்களை உடனடியாக கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மூன்று பேரை அவசர பிரிவு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.