பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி சாவு

ராம்நகர் : ஜனவரி. 10 – பள்ளிக்கூட பஸ் சக்கரத்தில் சிக்கி ஆறு வயது சிறுமி அதே இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ராம்நகர் மாவட்டத்தின் கனகபுரா தாலூகாவின் பிச்சனகேரே என்ற கிராமத்தில் நடந்துள்ளது. பிச்சனகேரே அருகில் பள்ளிச்சக்கரத்தில் சிக்கி ஸ்வாமி என்பவரின் மகள் யு கே ஜி படித்துவந்த ஆறு வயது ரக்ஷிதா அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். ரக்ஷிதா ஸ்ரீ சாய் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில் யு கே ஜி படித்துவந்த நிலையில் பள்ளியை முடித்து கொண்டு வீட்டுக்கு வரும்போது பள்ளிக்கூட பஸ்ஸின் கதவு திறந்தே இருந்ததால் ஒரு திருப்பதில் பிரேக் போட்ட போது பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துள்ளாள் . பின்னர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாள். கனகபுரா போலீஸ் நிலையத்தில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவாகியுள்ளது.