பள்ளி பேருந்துகள்:338 வழக்குகள் பதிவு

பெங்களூரு, பிப். 22: பள்ளி பேருந்துகள் மீதான சிறப்பு சோதனையில் 338 ஓட்டுநர்கள் மீது 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், பெங்களூரு போக்குவரத்து காவல்துறை (பிடிபி) புதன்கிழமை பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மீது மொத்தம் 338 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
பல்வேறு இடங்களில் 2,059 வாகனங்களை சோதனை செய்ததில்,
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 7 ஓட்டுந‌ர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறை விதிகளின்படி, அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டுநர்கள் மீது 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.