சென்னை: ஆகஸ்ட் 11-
வீடுகளில் சமையல் கேஸ் பயன்படுத்துவோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது செலவும் மிச்சப்படுத்தப்படுகிறது.. தற்போது ஐஓசி முன்னெடுத்துவரும் இந்த நடவடிக்கையானது, இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், ஆதரவையும் பெற்று வருகிறது. என்ன நடந்தது? இந்தியன் ஆயில் நிறுவனம் வெளிட்ட அறிவிப்பு என்ன? இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தமிழகத்தில், 1.33 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், நுகர்வோர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் ஏராளமான அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை வீடுகளுக்கும், 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை வணிக பயன்பாட்டிற்கு, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது… திறன் குறைந்த கேஸ் அடுப்புகள் அதனால்தான், வீடுகளில் பாதுகாப்பற்ற மற்றும் திறன் குறைந்த கேஸ் அடுப்புகளை மாற்றும் பணியை, இந்தியன் ஆயில் தற்போது கையில் எடுத்துள்ளது.. இதன்மூலம் 8 ஆண்டுகளாக ஒரே கேஸ் அடுப்பு பயன்படுத்தி வருவோரிடம், புதிதாக வாங்க சொல்லி வற்புறுத்தி வருகிறது.. 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வாடிக்கையாளரிடம், கட்டாயம் புதிய அடுப்பு வாங்குமாறு அறிவுறுத்தி வருகிறது. . இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, நிறைய வீடுகளில் இன்னமும் 8 வருடத்துக்கும் பழைய கேஸ் அடுப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள்..
இதுபோன்ற சிலிண்டர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் குறைந்திருப்பதால், கேஸ் நிறைய செலவாகும்.. நவீன மற்றும் உயர் வெப்ப திறன் உடைய கேஸ் அடுப்பை மாற்றிக் கொண்டால், வருடத்துக்கு 2 கேஸ் சிலிண்டர்களை சேமிக்க முடியும். பழைய அடுப்பு அதேபோல, ஏஜென்சிகளில் LPG , உபகரண ஆராய்ச்சி மையம் மற்றும் ISI சான்றளிக்கப்பட்ட 2 பர்னர், 3 பர்னர் கேஸ் அடுப்புகள் விற்கப்படுகின்றன.
பழைய அடுப்பை கொடுத்துவிட்டு, புதிதாக வாங்கினால், 500 ரூபாய் வரை தள்ளுபடியும் தரப்படும்” என்கின்றனர். பழைய காஸ் அடுப்புகளுக்கு பதிலாக, தள்ளுபடி விலையில் புதிய அடுப்புகள் விற்பனை செய்யப்படுவது, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது.. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையும், கஸ்டமர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

















