
பெங்களூர் : மார்ச். 10 –
பஸ்சில் உறங்கிக் கொண்டிருந்த கண்டக்டர் உடல் கருகி பலியான பரிதாப சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸில் கண்டக்டர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக கண்டக்டர் உயிருடன் எரிந்து கருகியுள்ளார். நகரின் மேற்கு பகுதியில் உள்ள லிங்காதீரனஹள்ளி அருகில் உள்ள டி க்ரூப் ஊழியர் லே அவுட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் 45 வயதான நடத்துனர் இரவு படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் அவர் பஸ்ஸுக்குள்ளேயே கருகி இறந்துள்ளார். இந்த விபத்தில் இறந்து போனவர் முத்தையா ஸ்வாமி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பஸ் சுமனஹள்ளி டிப்போவை சேர்ந்ததாகும். இது குறித்து பியாடரஹள்ளி போலீசார் தெரிவிக்கையில் முத்தையா ஸ்வாமி 80 சதவிகித தீ காயங்களால் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர். பஸ் தீ பிடித்து எரிவதை பார்த்த இரவு பணி போலீஸ் ஏட்டு உடனடியாக தீயணைப்பு துறைக்கு அதிகாலை 4.45 மணியளவில் தகவல் கொடுத்துள்ளார். பஸ்ஸின் ஓட்டுநர் பிரகாஷ் பஸ் நிலையத்தில் இருந்த ஒரு அறையில் படுத்து கொண்டிருந்த நிலையில் நடத்துனர் பஸ்ஸில் படுத்து உறங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பியாடரஹள்ளி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.. டிரைவர் வெளியே படுத்து உறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இந்த தீ விபத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது