பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு

மண்டியா : டிசம்பர். 11 – பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் மண்டியா பேரூந்து நிலையத்தில் கே எஸ் ஆர் தி சி பேரூந்துக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரின் ஆடுகோடியை சேர்ந்த பூஜா பாரதி ( 40) என்பவர் இந்த விபத்தில் உயிரிழநதவர். இவர் மண்டியா பேரூந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென திரும்பி வந்த கே எஸ் ஆர் டி சி பேரூந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பூஜா பாரதி அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இவர் தன் உறவினர் வீட்டிற்கு மண்டியாவிற்கு வந்த நிலையில் அங்கிருந்து நகருக்கு திரும்பிவர மண்டியா பேரூந்து நிலையம் வந்த நிலையில் கே எஸ் ஆர் டி சி என்ற காலன் இவர் உயிரை பறித்துள்ளான். பேரூந்து நிலையங்களில் ஓட்டுனர்கள் மிகவும் அலட்சியத்துடன் பேருந்துகளை ஓட்டும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் பொது மக்களின் உயிரை போக்கும் வகையில் இவர்கள் செய்யப்பட்டுவருவதும் தெரியவருகிறது. இந்த விபத்து தொடர்பாக மண்டியா மேற்கு பிரிவு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.