பெங்களூரு, ஆக. 20-
பெங்களூர் ஜெயநகரின் 4வது பிளாக்கில் பிஎம்டிசி மின்சார பஸ் சக்கரத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இறந்தவர் சம்பங்கி (64) என அடையாளம் தெரிய தெரியவந்துள்ளது. பஸ்ஸில் ஏறும் போது டிரைவர் கதவை மூடியதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது
கதவு மூடப்பட்டதால் சம்பங்கியின் கை கதவுக்குள் இருந்த நிலையில், அவரது உடல் வெளியே இருந்தது.
பஸ் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சம்பங்கி சக்கரத்தின் கீழ் விழுந்து இறந்தார். மின்சார பேருந்து ஜெயநகர் பேருந்து நிலையத்திலிருந்து மெஜஸ்டிக் நோக்கிச் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெயநகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, உடலை மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு சென்றனர்.பஸ் பஸ் டிரைவரை கைது செய்து இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















