
திருநெல்வேலி: திநவ.17-
ருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர்மற்றும் நடத்துநரை அரிவாளால்வெட்டியவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி, பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் நேற்று பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாபநாசத்திலிருந்து திருநெல்வேலியை நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ரெஜின்(43) ஓட்டினார். அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) நடத்துநராக செயல்பட்டார்.
இந்தப் பேருந்து வீரவநல்லூருக்கு முந்தைய ஊரான கல்லிடைக்குறிச்சிக்கு வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை நடுவழியில் மறித்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரை ஓட்டுநர் ரெஜின்கண்டித்ததால், இருவருக்கும்இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பேருந்து வீரவநல்லூருக்கு வந்ததும், அங்கு காத்திருந்த கும்பல் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டது. காயமடைந்த இருவரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வீரவநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 3 பேரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து, பாபநாசம் பணிமனையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நேற்று அதிகாலை முதலே அவர்கள் பேருந்துகளை இயக்க மறுத்தனர். தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர்முகம்மது சபீர் ஆலம் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.