பஸ் நிலையத்தில் டிப்போ அதிகாரி தற்கொலை

பெலகாவி : ஆகஸ்ட். 9 – மாநில போக்குவரத்து (கே எஸ் ஆர் டி சி ) கழகத்து கட்டுப்பாட்டாளர் ஒருவர் பேரூந்து நிலையத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சோக சம்பவம் ராயபாகா பட்டணத்தில் நடந்துள்ளது. சிவானந்தா பஜந்த்ரி (48) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ள ஊழியர். ராயபாகா பேரூந்து நிலையத்தின் படிகளில் உள்ள ஜன்னல் கம்பியில் இவர் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.
இவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இன்னும் தெரிய வில்லை.சம்பவ இடத்திற்கு ராயபாகா போலீசார் வந்து பரிசீலனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே வேளையில் மற்றொரு சம்பவத்தில் கணவனை பாம்பு கடித்த தகவல் அறிந்து மனைவி மாரடைப்பால் இறந்துள்ள சம்பவம் மங்களூரில் கடபா தாலூகாவின் நெல்யாடியில் நடந்துள்ளது. இதே வெளியில் பாம்பு கடித்த கணவன் மருத்துவமனையில் தேறி வருகிறார் . நெலயாடியில் வசித்து வந்த லசேசம்மா (60) என்பவர் மாரடைப்பால் இறந்திருப்பதுடன் நெலயாடியில் பத்மய்யா என்பவர் தன்னுடைய கழனியில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரை பாம்பு கடித்துள்ளது . உடனே அவரை மங்களூரில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கணவனை பாம்பு கடித்த தகவல் அறிந்த உடன் அவருடைய மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் கொடுத்த சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் இறந்துள்ளார். இதே வேளையில் பாம்பு கடித்த கணவன் மருத்துவமனையில் தேறி வருகிறார். இனி என்ன .. சிலர் சிரிப்பார் ..சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகிறேன் என்று தான் அவர் பாட வேண்டும்.