பஸ் பல்டி 32 பயணிகள் காயம்

மண்டியா : ஜனவரி. 6 – ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி கே எஸ் ஆர் டி சி பஸ் ஒன்று உருண்டதில் 32 பயணிகள் காயமடைந்துள்ள சோக சம்பவம் கே ஆர் பேட்டே தாலூகாவின் முருகுனஹள்ளி அருகில் சென்னராயப்பட்டனா – மைசூர் நெடுஞசாலையில் நடந்துள்ளது. கதக்கிலிருந்து மைசூருக்கு சென்றுகொண்டிருந்த மாநில போக்குவரத்து பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலை ஓரத்தில் இருந்த இரும்பு தடை சுவற்றில் மோதியுள்ளது. பஸ் மிகவும் வேகத்தில் இருந்ததால் தடுப்பு சுவர் நொறுங்கியுள்ளது. இதனால் பஸ் கீழே இருந்த நிலத்தில் உருண்டு விழுந்துள்ளது. இதன் விளைவால் பஸ்ஸில் பயணித்துவந்த 32 பேருக்கு காயங்கள் ஏற்பட்டிருப்பதுடன் இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாயுள்ளது . இவர்கள் அனைவருக்கும் கே ஆர் பேட்டை தாலூகா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கே ஆர் பேட்டை கிராமாந்தர போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.