பஸ் பள்ளத்தில் விழுந்து இந்தியர் உட்பட 17 பேர் பலி

மெக்சிகோ ஆகஸ்ட் 4- மேற்கு மெக்ஸிகோவில் பயணிகள் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்தியர்கள் உட்பட 18 பேர் பலியானார்கள். இதில் பெரும்பாலும் வெளிநாட்டினர் என்றும் இவர்கள் அமெரிக்க எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு எல்லை நகரமான டிஜுவானாவுக்குச் செல்லும் வழியில் இந்த பஸ் சென்று கொண்டு இருந்தது இதில் இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் உட்பட சுமார் 42 பயணிகளை இருந்தனர்
நயாரிட் மாநில அரசு ஒரு அறிக்கையில், சாலையில் ஒரு வளைவைச் சுற்றி பஸ் வேகமாகச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படுடுகாயம் அடைந்த சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பள்ளத்தாக்கு சுமார் 40 மீட்டர் (131 அடி) ஆழத்தில் இருந்ததால், மீட்பு மிகவும் கடினமானது” என்று நயாரிட்டின் பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு செயலாளர் ஜார்ஜ் பெனிட்டோ ரோட்ரிக்ஸ் கூறினார். கடந்த மாதம், தெற்கு மாநிலமான ஓக்ஸாகாவில் பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர், பிப்ரவரியில், தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மத்திய மெக்சிகோவில் விபத்துக்குள்ளானது, 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது