பஸ் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கார்3 பேர் உயிர் தப்பினர்

பெங்களூர் நவம்பர் 5
பேட்டராயணபரா போக்குவரத்து போலீஸ் சரகத்தில் நாகரபாவி ரிங் ரோட்டில் இன்று காலை 9 மணிக்கு பயங்கர விபத்து ஏற்பட்டது. வேகமாக வந்த கார் பஸ்ஸில் பின்புறம் மோதி தீப்பிடித்து எரிந்தது.
பஸ்ஸில் இருந்த கணவன் மனைவி மகள் மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த கார் எஸ்வந்த்பூரில் இருந்து பொம்ம நல்லி நோக்கி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
டி எம் டி சி பஸ் எஸ்வந்த்பூரில் இருந்து நாமடண்டனஹள்ளி செல்லம் பஸ் என்றும் இது பஸ் நிறுத்தம் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோது பின்பக்கமாக கார்
மோதியதாகவும் உடனடியாக தீப்பிடித்து எறிந்ததை பார்த்த டிரைவர் பஸ்ஸை சற்று தூரம் முன்னோக்கி எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது கார் தீப்பிடித்து எறிந்த உடன் அதிலிருந்து மூன்று பேரும் உடனடியாக கதவை திறந்து வெளியே ஓடி உயிர் தப்பியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்