புதுடெல்லி: ஜூலை 29-
‘ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மொத்தமே, 22 நிமிடங்கள் தான். அதில், பாகிஸ்தானுக்கு முழு தண்டனையும் தரப்பட்டுவிட்டது. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென யாராவது விரும்பினால் பிரதமர் மோடியிடம் அது நிச்சயம் நடக்காது. பாகிஸ்தானின் அணு ஆயத பூச்சாண்டியெல்லாம் இந்தியாவிடம் இனியும் எடுபடாது. இது மோடியின் புதிய இந்தியா. இங்கு வாலாட்டினால் பதிலடி நிச்சயம்,’’ என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: போரில் வீர மரணம் அடைந்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த நம் வீரர்களுக்கு என் அஞ்சலி. ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை துவங்கும் முன், நம் ராணுவத்தினர் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக ஆராய்ந்தனர். பல்வேறு கோணங்களில் யோசித்து, பயங்கரவாதிகளுக்கு அதிக அளவில் எவ்வாறு சேதங்களை ஏற்படுத்த முடியும் என்பதை கணித்துவிட்டே தாக்குதலை ஆரம்பித்தனர்.












