பாகிஸ்தான்: மதபோதகர் மீது துப்பாக்கிச்சூடு

லாகூர்,செப். 6 பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்கள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா தாசில் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் மதபோதகாராக செயல்பட்டு வருபவர் எலேசர் விக்கி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டு தலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மீது ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினார். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மதபோதகர் விக்கியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.