பாகிஸ்தான் மறுப்பு

இஸ்லாமாபாத், செப்டம்பர் 20-கொரோனா தொற்று பரவலின் எதிரொலி காரணமாக உலகநாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. தொற்று குறைவுக்கு பிறகும் பாகிஸ்தானின் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்தது. இதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க முடிவு செய்தது. அதன்பேரில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற ஒப்பந்தம் போடப்போட்டு பரிசீலனையில் உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் ஆதரவை பெற வேண்டி உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவின் புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை சுலபமாக பெற எதுவாக அமைவதாக செய்திகள் கசிந்தன. இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அதிகாரி மும்தாஜ் சக்ரபலோச் மறுத்துள்ளார். “அமெரிக்கா நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதரமற்றது” என்று அவர் கூறிய உள்ளார்.