பாசில் கொலை தொடர்பாக 6 பேர் கைது

மங்களூர்: ஆகஸ்ட் . 2 – சுரத்கல்லில் நடந்த பாசில் கொலை விவகாரம் தொடர்பாக ஆறு பேரை நகர போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீனிவாஸ் , அபி , சுஹாஸ் , அஜித் , மோகன் மற்றும் கிரி ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குரங்கு தொப்பி அணிந்து வந்து பாசிலை கொலை செய்துள்ளனர். சுரத்கல் போலீஸ் நிலையத்திற்கு குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டிருப்பதுடன் அவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . ஏ சி பி மகேஷ் குமார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இந்த கொலை நடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காரை குற்றவாளிகளுக்கு அளித்த அஜீத் க்ராஸ்தா என்பவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் உடுப்பியில் கொலைக்கு பயன்படுத்திய கார் கைப்பற்றப்பட்டுள்ளது . இந்த விவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் இது குறித்து நேற்று தகவல் தெரிவித்த மங்களூர் போலீஸ் ஆணையர் இந்த கொலை சம்மந்தமாக 51 பேரிடம் விசாரணை நடத்தி கொலையின் முழு விவரங்களையும் சேகரித்து வருவதாக தெரிவித்தார்.