பாஜகவின் 5 தேர்தல் பிரசார வாகனங்களின் சேவை தொடக்கம்

பெங்களூரு, ஏப்ரல் 1 பெங்களூரில் உள்ள பாஜக மாநில அலுவலகமான ஜெகநாத் பவனில் அக்கட்சியின் 5 தேர்தல் பிரசார வாகனங்களின் சேவை இன்று தொடக்கி வைக்கப்பட்டது.சட்டப்பேரவை உறுப்பினர் கேசவபிரசாத், எம்எல்ஏ எஸ். முனிராஜு, வடக்கு மாவட்ட தலைவர் ஹரீஷ், மத்திய மாவட்ட தலைவர் சப்தகிரி கவுடா மற்றும் செயல்வீரர்கள் பிரசார வாகனங்களின் சேவையை தொட‌க்கி வைத்தனர்.
மத்திய மக்களவை உறுப்பினர் பி.சி.மோகனின் வேட்புமனு இன்று தாக்கல் செய்தார். அவரின் பிரசாரத்திற்கு இந்த‌ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் குண்டு துளைக்காத வாகனத்தின் சேவையும் தொடக்கி வைக்கப்பட்டது.
இது பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. எங்கள் வேட்பாளர்கள் இந்த வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்றும், 28 தொகுதிகளிலும் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது.