பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு, பிரதமர் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த பாஜக துணை முதலமைச்சர்களுடன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உள்பட 12 முதல்வர்கள் மற்றும் எட்டு துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்றார்.