பாடப்புத்தக விவகாரம் முதல்வருக்கு கோரிக்கை

தாவணகெரே : மே. 29. – பாட புத்தகங்களின் மறு சீரமைப்பு குறித்து ஏற்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக முதல்வர் இடை நுழைந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என பாட புத்தகங்கள் நடைமுறை குழு தலைவர் பர்கூர் ராமச்சந்திரப்பா வற்புறுத்தியுள்ளார். தாவணகெரேவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரப்பா கல்வி துறை காப்பாற்றப்பட வேண்டும் என்பது என் நோக்கம். அந்த வகையில் முதல்வர் இடையில் நுழைய வேண்டும். கல்வியை காப்பாற்றுவதில் முதல்வரின் இடை நுழைதல் தவிர்க்க முடியாதது. நான் தலைவராக இருந்த போதும் பாட புத்தகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது . அப்போது தேசிய பாட புத்தகங்கள் நியமனம் மற்றும் நம் பாராளுமன்ற நியமங்கள்படியே நடந்தது. ஆனால் இப்போது பாட புத்தகங்களை நடைமுறை படுத்தியிருப்பது தீவிர சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது. இது போன்ற விஷயங்களில் முதல்வர் தலையிட்டு இந்த குழப்பங்கள் குறித்து ஆலோசித்து இத்தகைய விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என பர்கூர் ராமச்சந்திரப்பா தெரிவித்துள்ளார்.