பாட்டி அஸ்தியைக் கரைக்க வந்த பேரன் நீரில் மூழ்கி சாவு

மண்டியா, அக்.18-
பாட்டியின் அஸ்தியை கரைக்க வந்த பேரன் நீரில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கோசாய் காட் அருகே காவிரி ஆற்றில் பாட்டியின் அஸ்தியை கரைக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியானார். பெங்களூரில் உள்ள விபுரத்தைச் சேர்ந்த என்.ஸ்ரீபிரசாத் (31) இவரது பாட்டி சந்திரமதி வயது முதிர்ச்சியில்
காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது அஸ்தியை கரைக்க ஸ்ரீரங்கப்பட்டனம் கோசாய் காட் வந்திருந்தனர். ஸ்ரீபிரசாத், தனது உறவினர் மயூருடன் சேர்ந்து, அஸ்தியை கரைக்க காவேரி நதிக்கு இறங்கி, இறுதியாக வேத வழிகாட்டுதலின் படி சடங்கை முடித்தார்.அப்போது தண்ணீரில் தலை மூழ்குவதற்கு அவர்கள் நதியில் ஒரு அடி உள்ளே சென்றனர். அப்போது திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. இதில் இரண்டு பேரும் நீரில் அடித்து சென்றனர். அங்கிருந்தவர்கள் கதறித் துடித்தனர் அவர்களை காப்பாற்ற தீவிர முயற்சி செய்தனர் இதில் மயூர் காப்பாற்றப்பட்டார் . ஆனால் ஸ்ரீபிரசாத்
நீரில் மூழ்கினார். பாட்டியின் அஸ்தியைக் கரைக்க வந்த பேர் பலியானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது