பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

பாட்னா, ஏப். 25: பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) தலைவர் சவுரப் குமார் புதன்கிழமை இரவு மர்ம பர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.பிகார் மாநிலம், பாட்னாவில் ஜனதா ஜேடியு தலைவர் சவுரப் குமார் புதன்கிழமை இரவு தனது நண்பர்களுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த நிலையில் கன்கர்பாக் உமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவத்தில் அவருடன் காரில் வந்த முன்முன் குமார் என்பவர் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து துப்பாக்கிச் சூடு நடத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தேடும் பணி ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.