பாட புத்தக குழுவை ரத்து செய்க

பெங்களூர் . ஜூன் . 5 –
மாநிலத்தில் பாட புத்தகங்களை தயாரிப்பது குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் திருத்தப்பட்ட புத்தங்களை திரும்பபெற்று பழைய புத்தகங்களையே வழங்குங்கள் என சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் சித்தராமையா அரசை வற்புறுத்தியுள்ளார். ஆர் எஸ் எஸ்சுக்கு ஆதரவாக உள்ள பாடபுத்தகங்களை திரும்பப்பெற்று பாட புத்தக குழுவை ரத்து செய்யுமாறும் வற்புறுத்தியுள்ள சித்தராமையா எதிர்மறை மனத்துள்ள கயவன் தலைவனாய் தயாரித்துள்ள இந்த புத்தகங்களை குப்பை தொட்டியில் வீசி எறியுங்கள் என தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர் ட்வீட் செய்துள்ள சித்தராமையா திருத்தப்பட்ட பாட புத்தகங்களால் பெரும்பான்மை ஹிந்துக்கள் மனதிற்கு மட்டுமின்றி மாநிலத்தின் ஆறரை கோடி கன்னடிகர் மனதும் புண்பட்டுள்ளது . கன்னடிகரின் பொறுமையை சோதிக்க முயற்சிக்க வேண்டாம் . முதலில் திருத்தப்பட்ட பாட புத்தகங்களை திரும்பபெருங்கள் . நாட்டில் ஏழைகளில் பெரும்பான்மையாயிருப்பவர்கள் ஹிந்து தர்மத்தை பின்பற்றும் தலித்துகள் மற்றும் பின் தங்கிய வகுப்பினர். அரசு பள்ளிகளில் இந்த இன மாணவர்களே அதிகம் . புத்தர் ,பசவண்ணர் , அம்பேத்கார் , சாவித்ரிபாய் புலே , நாராயண குரு , குவெம்பு ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தால் இன்றைய மாணவர்களின் மனத்திலும் மாற்றங்கள் ஏற்படுமல்லவா . பசவண்ணர் மற்றும் பாபா சாஹேப் அம்பேத்கர் ஆகியோர் ஹிந்து தர்மத்தை புறக்கணித்த காரணத்திற்க்காக அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா , அவமதிக்கப்பட்டுள்ளார்களா.. நாராயணகுரு , பெரியார்.. குவெம்பு ஆகியோர் ஹிந்து தர்மத்தின் தவறுகளை எடுத்து காட்டியதால் புறக்கணிக்கப்பட்டார்களா என்பதை தெளிவாக கூறி விடுங்கள் என சித்தராமையா ஆளும் கட்சியினரை நோக்கி தன் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.