பாதுகாப்புக்கு சிறப்பு படை

புவனேஸ்வர்: ,டிச.26 ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ் பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது.புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். கோயிலின் பாதுகாப்பு தொடர்பாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் தலைமையிலான குழு ஆய்வு செய்து மாநில அரசிடம் அறிக்கை அளித்தது.
இதன்படி புரி ஜெகந்நாதர் கோயில் பாதுகாப்புக்கு 1,190 வீரர்கள் கொண்ட சிறப்புப் படையை அமைக்க முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் தலைவராக புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயல்படுவார் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.