
புதுடில்லி: ஜூன் 10-
”கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தன்னிறைவு பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு நிறைவு பெற்றது. இந்நிலையில், மத்திய அரசின் ஆட்சி குறித்தும், பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது பாதுகாப்பு துறையை நவீனமாக்குவதும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.