பாதுகாப்பு வளையத்தில் டெல்லி

புதுடெல்லி: ஆக. 14
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி, உரையாற்றுகிறார்.
இதனால் டெல்லி செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பாதுகாப்புப்படையினர் முதல் டெல்லி போலீசார் வரை என பாதுகாப்புப்படை பிரிவுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாகனமும் முற்றிலும் சோதனைக்குட்ப்பட்ட பிறகே டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையே ரெயில் நிலைய கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் மூவர்ணக்கொடி கலரில் ஜொலித்து வருகின்றன. நொய்டா மற்றும காசியாபாத்தில் இருந்து வருகிற 15-ந்தேதி வரை டெல்லி நகருக்குள் வரும் கனரக வாகனம் மற்றும் பொது பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரெயில் நிலைய கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் மூவர்ணக்கொடி கலரில் ஜொலித்து வருகின்றன.