பாதுஷா செய்யும் முறை


தேவையான பொருட்கள் :
நெய் – இரண்டு ஸ்பூன்
தயிர் – மூன்று ஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்
உப்பு – கால் ஸ்பூன்
கேசரி – சிறிதளவு
மைதா மாவு – ஒரு கப்
சர்க்கரை – ஒன்னேகால் கப்
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை: முதலில் சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும்.( பாகு சற்றே கெட்டியாக இருக்க வேண்டும்) சர்க்கரை பாகு செய்யும் போதே ஏலக்காய் பொடியையும் சேர்த்து கொள்ளவும். ஒரு பவுலில் நெய் ஊற்றவும். தயிரை சேர்த்து அத்துடன் சோடா மற்றும் உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு கப் மைதா மாவு மற்றும் கேசரி போட்டு மீண்டும் நன்றாக கலக்கவும். இந்த கலவை கையில் ஒட்டும் வகையில் இருக்க கூடாது. பின்னர் இந்த கலவையை சிறிதாக எடுத்து உருண்டைகள் போல் செய்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு கைகளாலேயே தட்டவும் (சிறிது தட்டையாக) அதன் நடுவில் துளை போல் செய்யவும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் நன்றாய் காய்ந்த பின்னர் கைகளால் உருண்டைகளை தட்டி தட்டி எண்ணெயில் போடவும். அதனிரண்டு பக்கங்களும் சற்றே தங்க நிறம் ஆகும் வரையில் வறுக்கவும். பின்னர் எண்ணெயிலிருந்து எடுத்து சரக்கரை பாகில் போடவும். இருபது நிமிடங்களுக்கு பின்னர் அதை வெளியே எடுத்து பார்த்தால் அடடா…. இத்தனை அருமையான பாதுஷாவை நாமா செய்தோம் என நீங்களே ஆச்சரியப்படும் வகையில் பாதுஷா ஜீரா சொட்ட சொட்ட தயாராயிருக்கும்.