பாத வெடிப்பு சீராக வீட்டு வைத்தியம்


கால்களில் வெடிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க அரிசி மாவு, வாழைப்பழம் ,தேன், அலோவரா ஜெல் வினிகர் மற்றும் வாஸ்லின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தலாம்
அரிசி மாவு சதைகள் உறைவதை தவிர்க்கும். இது சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் மறு வாழ்வும் அளிக்கும். தேன் இயற்கையான நச்சு எதிர்ப்பு சக்தி கொண்டது. இது வெடிப்பு வந்த பாதங்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. வினிகர் ஒரு நல்ல சுவாசனை உள்ள திரவியம். அது உலர்ந்த மற்றும் இறந்து போன சரும அணுக்களை மீண்டும் உயிர்ப்பிக்க செய்யும். இதுவும் சருமம் உரிவதை தவிர்க்கும்.
மூன்று ஸ்பூன் அரிசி மாவு , நான்கு துளிகள் வினிகர், ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு வினிகர் , மற்றும் தேனை கலக்கவும். பின்னர் பாதங்களை சூடு நீரில் பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள பேஸ்டை வெடிப்பு உள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் சில மணி நேரம் கழித்து சுத்தமான நீர் கொண்டு கழுவவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இப்படி செய்யவும். பின்னர் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் பழைய பொலிவை பெரும். .
வாழைப்பழத்தில் இயற்கையான குளுமை மற்றும் ஈரப்பதம் படுத்தும் குணம் கொண்டது. இதில் வைட்டமின் எ , பி , மற்றும் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது சருமத்தின் பொலிவை காக்க உதவும். தவிர வெடிப்புகள் வருவதையும் தவிர்க்கும்.. பழுத்த இரண்டு வாழைப்பழங்களை ஒரு கிண்ணத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். இதை பாதங்களின் விரல்களின் இடையில் அனைத்து பகுதிகளிலும் தடவவும் . இருபது நிமிடங்களுக்கு பின்னர் சுத்தமான நீரில் பாதங்களை கழுவவும். தினசரி உறங்கும் முன்னர் இரவில் இந்த முறையை செய்தால் பாதங்களின் செழுமை நீடித்து நிலைக்கும்.
இதே போல் தேன் சருமத்தின் உள்ளேயும் வெளியேயும் குளுமையை தர வல்லது. மற்றும் ஈர பதம் தருவது. சருமத்தின் வெளி பகுதி வீங்குவது மற்றும் வெடிப்பது போன்ற பிரச்சனைகளை தீர்க்க வல்லது. ஒரு பக்கெட்டில் சூடான நீரில் ஒரு கப் தேனை கலக்கவும். பத்து நிமிடங்கள் வரை கால்களை அந்த நீரில் வைத்திருக்கவும். பின்னர் இதே நீர் கொண்டு மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தின் இறந்த அணுக்கள் மீண்டும் உயிர்பெற்று சருமம் பழைய பொலிவை பெரும்.
அதே போல் அலோவேரா ஜெல்லிலும் வைட்டமின் எ , சி மற்றும் இ சத்துக்கள் உள்ளன. இவை சருமத்தின் பொலிவை காக்கவல்லது. இது மட்டுமின்றி சரும பகுதியில் ஏற்படும் காயங்களையும் போக்க வல்லது. சூடான நீரில் பாதங்களை நனைத்து பின்னர் மிருதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் பாதங்களை கழுவி துடைத்து விடவும். பின்னர் அலோவேரா ஜெல்லை தடவவும். காலுக்கு சாக்ஸ் அணிந்து படுத்துறங்கவும். அதிகாலை கால்களை சுத்தமாக கழுவவும். ஐந்து நாட்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மாயமாகி விடும்.
இதே போல் வாசலினும் சருமத்துக்கு ஈர பதம் தர வல்லது. மற்றும் எலுமிச்சையும் சிட்ரிக் அம்சம் கொண்டதென்பதால் சருமம் உரிவது மற்றும் சருமம் உலர்வதை தடுத்து சருமத்தில் உயிரணுக்களை மீண்டும் எழ செய்யும். சூடு நீரில் உங்கள் பாதத்தை இருபது நிமிடங்கள் நினைக்கவும். பின்னர் உலர்ந்த துணி கொண்டு துடைக்கவும். ஒரு பவுலில் நான்கு அல்லது ஐந்து துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் வாஸ்லின் கலக்கவும். பின்னர் இந்த பேஸ்டை பாதங்கள் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகளில் தடவி விடவும். பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்கவும். காலையில் எழுந்து சூடு நீரில் பாதங்களை கழுவவும். தினசரி இந்த முறையை பின்பற்றினால் கால் வெடிப்புகள் முழுதும் இல்லாது போகும்.