பானி பூரியை தடை செய்ய அரசு திட்டம்

பெங்களூரு,ஜூலை 3- கர்நாடகாவில் விற்கப்படும் பானி பூரியின் தரத்தினை பரிசோதித்த போது, அதிலுள்ள செயற்கை நிறமிகள் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், கபாப், பஞ்சு மிட்டாய் ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள் கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பானி பூரியில் செயற்கை நிறமிகள், ரசாயனங்கள் கலக்கப்படுவதாக அம்மாநில உணவுத்துறைக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் 276 கடைகளில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர். இதில், 41 மாதிரிகளில் செயற்கை நிறமிகள், புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 18 பானி பூரி மாதிரிகள் (22%) மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என தெரியவந்தது. 52 சதவீத மாதிரிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் கலந்துள்ளது கண்டறியப்பட்டது.அதில் நீலம், பச்சை, ஆரஞ்சு போன்ற நிறங்களில் ரசாயனங்கள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. இது தொடர்பான விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறோம். மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்ற உணவை ஏன் தடை செய்யக்கூடாது?’’என கேள்வி எழுப்பினார்.