பானி பூரி தயாரித்து மக்களுக்கு வழங்கிய மம்தா

டார்ஜிலிங், மேற்கு வங்காளத்தில், மலைகளின் ராணி என்ற செல்லப்பெயரை கொண்ட டார்ஜிலிங் நகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டார்ஜிலிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கே அவர் சாலையோரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருகிற ‘சண்டே ஹாட்’ என்ற பானி பூரி கடைக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள், பானி பூரி தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதைக் கண்டார். அவர்களின் கடின உழைப்பைக் கண்டு பாராட்டினார். அத்துடன் அவர் நிற்கவில்லை. எந்த தயக்கமும் இன்றி அந்தப் பெண்களுடன் தானும் சேர்ந்துகொண்டு உற்சாகமாக பானி பூரி தயாரித்தார். அவர் பூரிக்குள் மசித்த உருளைக்கிழங்கை வைத்து, புளித்தண்ணீரில் நனைத்து தனது கைப்பக்குவத்தை காட்டி அசத்தினார். அந்த பானி பூரியை அவர் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

https://www.dailythanthi.com/News/India/watch-mamata-banerjee-serves-pani-puri-to-people-in-darjeeling-745115