பாம்பு கடித்து உடனடியாக சிகிச்சை கிடைக்காததால் பெண் சாவு

பெங்களூர்:செப்டம்பர். 13 – பெண்ணொருவர் பாம்பு கடித்து தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலையில் இறந்துள்ள துயர் சம்பவம் ராம்நகரின் கைலான்சா ஒன்றியத்தில் உள்ள நாகோஹள்ளி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. நாகோஹள்ளியை சேர்ந்த ஆஷா ராணி (33) என்பவர் பாம்பு கடித்து இறந்தவர். வீட்டின் பின்புறத்தில் தோட்ட வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் விஷப்பாம்பு ஆஷா ராணியை கண்டித்துள்ளது. அப்போது வலி மற்றும் பயத்துடன் ஆஷா ராணி கதறிக்கொண்டே வீட்டின் முன்புறம் ஓடி வந்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தார் வாகனத்தில் கைலான்ச்சா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லதாதால் ராம்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆஷா ராணி இறந்து போனார். ஆஷா ராணிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதுடன் மகன் ஒன்பதாவது வகுப்பும் மகள் ஆறாவது வகுப்பும் படித்து வருகிறார்கள். கணவன் பெயின்டர் வேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து ராம்நகர் கிராமாந்தர போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.