பாம்பு கடித்து சிறுவன் சாவு

பெங்களூரு, ஜூன் 15: பாம்பு கடித்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகாவில் உள்ள கும்மாவரண்ட்லபள்ளி கிராமத்தில் நடந்துள்ளது.
மாலதி-சுரேஷ் தம்பதியின் ஒரே மகன் தீட்சித் (3) வீட்டு வளாகத்தின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு கடித்து உயிரிழந்தார்.உடனடியாக தீட்சித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பாகேபள்ளி மருத்துவமனை ஸ்டாப் நர்ஸ் பொம்மண்ணா உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாக்டர் வரும் வரை குழந்தையின் நிலை மோசமானதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் உட்பட பல்வேறு இடங்களில் பாம்புகள் தொல்லை அதிகரித்து உள்ளது பல இடங்களில் பாம்புகள் கழித்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது ஆனால் அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு இல்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது குறிப்பாக கிராமப்புற கர்நாடக பகுதிகளில் பாம்பு கடிக்கு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை மருந்துகள் கையிருப்பு இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது