பாரத் பந்த் தோல்வி

புது டெல்லி : ஜூன். 20 – மத்திய அரசின் மிகவும் எதிர்பார்க்கும் திட்டமான அக்னிபத் திட்டத்தை எதிர்த்து அழைப்பு விடுக்கப்பட்ட பாரத் பந்த் முழு தோல்வி அடைந்துள்ளது. பிஹார் உட்பட சில மாநிலங்களில் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் மக்களிடமிருந்து இதற்க்கு முழு ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் பந்த் முழு தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கிடையில் எதிர்ப்பு போராட்டம், வன்முறை , என எதி பற்றியும்கவலை படாமல் அக்னிபத் திட்டத்தை நடைமுறை நியமன நடவடிக்கைகளை துவங்க ராணுவம் முற்பட்டுள்ளது. நாட்டின் எந்த பகுதியிலும் வன்முறை நடந்ததாக தகவல்கள் இல்லை. பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்த்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் மிக அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் உட்பட பதட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்திருப்பதால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இன்று நடக்க இருந்த ஒன்பது மற்றும் பதினோராவது வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என ஜார்க்கண்ட் பள்ளி கல்வி செயலாளர் ராஜேஷ் குமார் ஷர்மா தெரிவித்தார். பீகாரில் பாரத் பந்திற்கு அழைப்பு விட்டிருந்த நிலையில் இதற்க்கு எந்த இயக்கங்களும் ஆதரவு அளிக்க வில்லை. இதனால் வட இந்தியாவின் சில மாநிலங்களில் பந்த் அவ்வளவாக பாதிக்கவில்லை . பீகாரில் கடும் எச்சரிக்கை வகுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பாரத் பந்த் விஷயமாக கேராளவிலும் கடும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் அல்லது வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவர் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர் . தவிர அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பரத் பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி – குறுகிராமா அதிவிரைவு சாலையில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் பல கிலோமீட்டர்கள் நீளத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.