பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி, செப்.8
ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். இன்று முதல் தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் அவர் நடக்கிறார். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு ‘ஷிப்டு’களாக நடைபெறுகிறது. 11-ந் தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இந்நிலையில் பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார். முன்னதாக அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கும் முன் ராகுல்காந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “”ஒற்றுமையில் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா, வா, வா” இன்று தொடங்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத
அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று வேண்டுவோம்” என்று அதில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.