பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

டெல்லி: டிச. 14 76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இது வரும் 22ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ‘ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்’ மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, கடந்த ஜூலை 27-ம் தேதி மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், ”மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் 1,486 பழைய சட்டங்களை ரத்து செய்தது. நிலம் கையகப்படுத்துதல் (சுரங்கங்கள்) சட்டம்-1885, தந்தி கம்பிகள் (சட்டவிரோதமாக வைத்திருத்தல்) சட்டம்-1950 உள்ளிட்டவை இதில் அடங்கும். முன்னதாக, மாநிலங்களவையில் விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ‘கடந்த 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மக்களின் வாழ்வையும் தொழில் புரிவதையும் எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை 1,562 காலாவதி சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.