பாராளுமன்றத்தில் ராகுல் கர்ஜனை

புதுடெல்லி ஆக.8- மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் இன்று பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் தொடங்கியது. இதில்பங்கேற்று ராகுல் காந்தி உணர்ச்சிகரமாக பேசினார். பிஜேபி தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடி அரசின் பல்வேறு சட்ட மீறல்களை பட்டியலிட்டு காட்டிய ராகுல் காந்தி இத்தகைய சர்வாதிகார போக்கு நீடிக்காது மக்கள் மன்றத்தில் தோற்பது உறுதி என்று ஆவேசமாக கூறினார். மேலும் மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து விளக்கமாக பேசிய ராகுல் காந்தி மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் பேசும்போது பிஜேபி உறுப்பினர்கள் கடும் கூச்சல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சலுக்கு மத்தியில் அவர் தனது பேச்சை தொடர்ந்தார். பகல் 12 மணிக்கு தொடங்கிய விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.
ராகுல் காந்தி, மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றவுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் நிஷாந்த் துபே விவாதத்தின் முதல் பேச்சாளராக இருப்பார் என தெரிகிறது
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியது.
இதனையடுத்து 4 மாத இடைவெளிக்குபிறகு, அவை நடவடிக்கைகளில் நேற்று (திங்கள்கிழமை) அவர் பங்கேற்றார். இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து உரையாற்றினார். ராகுல் காந்தி பேச்சை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளும் உற்று நோக்கி வருகிறது இது ஒரு வரலாற்று திருப்புமாக பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இன்று பகல் ராகுல் காந்தி தனது உணர்ச்சிகரமான பேச்சை தொடர்ந்தார். கடைசியாக ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி 2023-ல் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். இந்த விவாதம் மாலை 7 மணி வரை நீடிக்கும். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இதே நேரத்தில்தான் விவாதம் நடைபெறும். ஆகஸ்ட் 10 அன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் வன்முறை வழக்கில் மவுனம் காத்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி “இந்தியா” உறுப்பினர்கள் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் தொடங்கியது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் மறுப்புக் களமாக உள்ளது. இதற்கிடையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு சமீபத்தில் இந்திய கூட்டணியின் பிரதிநிதிகள் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி சந்திக்கும் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் இது. இதில் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளன. பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எந்தத் தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் விலகி நிற்கின்றன.நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பலத்தை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு 301 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோலவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமரை அவையில் பேச வைப்பதற்காக மட்டுமே என்பது இதன் மூலம் புலப்படுகிறது. இருப்பினும் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 8 முதல் 11 வரை தவறாமல் அவைக்கு வர வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற கொறடா உத்தரவிட்டுள்ளார்.