பாராளுமன்றத் தேர்தல்: இந்தியா கூட்டணி முக்கிய ஆலோசனை

டெல்லி, ஜன. 13- இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது.024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது
குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.