பாராளுமன்றத் தேர்தல் நிறைவு

புதுடெல்லி, ஜூன்.1-
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து உள்ள இந்திய பாராளுமன்ற தேர்தல் இன்று நிறைவு பெற்றது.நாட்டின் புதிய பிரதமர் யார்?என்று பரபரப்பு நிலவுகிறது.ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.அன்றைய தினமே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது யார் பிரதமர் என்ற விபரங்கள் தெரிய வரும்
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.இன்று மாலைக்குள் 70% வாக்குப்பதிவுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில், 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி மற்றும் 7-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்றுநடைபெற்றது அதன்படி, உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதி வுநடைபெற்றது
காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்:
உத்தர பிரதேசம்- 12.94%
பஞ்சாப்- 9.64%
மேற்கு வங்கம்- 12.63%
பிஹார் – 10.58%
ஒடிசா- 7.69%
இமாச்சல பிரதேசம்- 14.35%
ஜார்க்கண்ட்- 12.15%
சண்டிகர் – 11.64%
9 மணி நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் 14.35% என அதிகபட்சமாகவும் ஒடிசாவில் 7.69% வாக்குப்பதிவாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம்சார்பில் மத்திய அமைச்சர் அனுபிரியா,மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பரில் அபிஷேக் பானர்ஜி (திரிணமூல்), பிஹாரின் பாடலிபுத்ராவில் லாலுமகள் மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் மாநில அமைச்சர் விக்ரமாதித்யா (காங்கிரஸ்), பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (பாஜக), ஹமீர்பூரில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் (பாஜக) என 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று மாலையுடன் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, பல்வேறு ஊடகங்கள் சார்பில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும். இதன்மூலம் தேர்தல் முடிவுகள் குறித்து ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாயின் வாக்குச் சாவடி 40 மற்றும் 41 இல், ஒரு கும்பல் வாக்குச் சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்கு எந்திரம் மற்றும் காகிதங்கள் மற்றும் இரண்டு விவி பேட் இயந்திரங்களை தூக்கி சென்று கால் வாயில் வீசியது. இந்தச் சாவடிகள் அனைத்திலும் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் பல வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை அடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவுவதால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அனைத்து தேர்தல்களிலும் வன்முறை மற்றும் மோதல்கள் நடந்துள்ளன, மேலும் பாஜக மற்றும் டிஎம்சி தொண்டர்களிடையே சண்டைகள் நடந்துள்ளன.