பாராளுமன்ற அத்துமீறல்முக்கிய குற்றவாளி சரண்

கொல்கத்தா,டிச.15-
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர். பாதுகாப்பு அதிகம் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் கொல்கத்தாவை சேர்ந்த லலித் ஜா. நாடாளுமன்றத்திற்குள் பாதுகாப்பு விதிமுறையை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லலித் ஜா, தலைமறைவானார்.
அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடத்தினர். இந்த நிலையில், நேற்று இரவு டெல்லி போலீசாரிடம் லலித் ஜா சரண் அடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதைத்தொடர்ந்து முறைப்படி கைது செய்யப்பட்ட லலித் ஜா, டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். லலித் ஜாவிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.