பாராளுமன்ற தேர்தல் இன்று முதல் மோடி பிரச்சாரம்

புலந்த்சாகர்: ஜனவரி 25
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை உத்தர பிரதேசம் புலந்த்சாகரில் பிரதமர் மோடி இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் எனவும், இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து 3-வதுமுறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கு உத்தர பிரதேசத்தில் இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாராணசி கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ளது. ஆனால், அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை புலந்த்சாகரில் இன்றுதொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட ஒரு சில நாளில் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வர் என பாஜக கூறியுள்ளது.