பாராளுமன்ற தேர்தல் – திமுகவில் குவியும் விருப்ப மனுக்கள்

சென்னை மார்ச்.2-
திமுக வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு படிவம் விநியோகம் கடந்த பிப்.19-ம் தேதி தொடங்கியது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து, ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில், நேற்று முதல் பூர்த்தி செய்த விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
இதில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 51 மனுக்கள் வந்துள்ளன.அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கமும், தருமபுரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பழனியப்பனும் விருப்ப மனு அளித்துள்ளனர்.