பார்வையற்ற சிறுமியைக் கொன்ற சித்தப்பா கைது

சிக்கபல்லாப்பூர், ஜன. 13- சிக்பல்லாபூர் ,அங்காரகனஹள்ளி என்ற இடத்தில் 5 வயது சிறுமியை சித்தப்பாவே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
அங்காரகனஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கர். (35). இவர் பூ வியாபாரி இவரது அண்ணன் மகள் சர்மிதா (5) பிறந்ததில் இருந்து பார்வையற்றவராக இருந்தார்.
பார்வைக்கோளாறு ஏற்பட்டிருந்ததால் தனது அண்ணனே அவர் மகளை கொன்றுவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் அண்ணன் வீட்டில் இருந்து தப்பித்து சித்தப்பா வீட்டிற்கு வந்தார்.
அண்ணன் மகள் சிறுமியை பூ வியாபாரி சங்கர் தனது வீட்டிலேயே. கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் போலீசுக்கு தெரிந்து சங்கரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.